பிரபல சூப்பர்ஹீரோவான ஃப்ளாஷ் கதாப்பாத்திரத்திற்கான முதல் படத்தின் முதல் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது மார்வெல், டிசி சூப்பர்ஹீரோக்களுக்கு மிகப்பெரும் ரசிக கூட்டம் உருவாகியுள்ளது. டிசி காமிக்ஸின் பிரபலமான சூப்பர்ஹீரோக்களில் ஒருவர்தான் ஃப்ளாஷ் (பெர்ரி ஆலன்). இதற்கு முன்னர் டிசியின் படங்களனா ஜஸ்டிஸ் லீக் (Justice League), பேட்மேன் வெர்சஸ் சூப்பர் மேன் (Batman Vs Superman) ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஃப்ளாஷ் (Flash) தோன்றினார்.
எனினும் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் படத்தில் ஃப்ளாஷுக்கு அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் பெரும் ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிர எதிர்பார்ப்புக்கு நடுவே தி பிளாஷ் (The Flash) படத்தின் அனைத்து மொழி ட்ரெய்லர்களும் தற்போது வெளியாகியுள்ளது.
நிகழ்வு டைமென்ஷனில் தனது தாயை சிறுவயதிலேயே இழந்த பெர்ரி ஆலன் (பிளாஷ்) டைம் ட்ராவல் செய்து கடந்த காலத்திற்கு சென்று நிகழ்வுகளை மாற்றுகிறான். இதனால் ஏற்படும் ஆல்டர்னேட் ரியாலிட்டியில் ஜெனரல் ஸாட் பூமியை அழிக்க வருகிறான்.
அந்த ஆல்டர்னேட் ரியாலிட்டியில் சூப்பர்மேன், பேட்மேன் என எல்லாருமே வேறு ஆட்களாய் இருக்கிறார்கள். அவர்கள் உதவியை கொண்டு ஜெனரல் ஸோடை பிளாஷ் முறியடித்தாரா? ஆல்டர்னேட் ரியாலிட்டி என்ன ஆனது? என்பதே பிளாஷ் படத்தின் ட்ரெய்லர் சொல்லும் சுவாரஸ்யமான கதை.
இந்த ட்ரெய்லரில் ஆல்டர்னேட் ரியாலிட்டியில் பேட்மேனாக மைக்கெல் கீட்டன் வருகிறார். இவர் பழைய பேட்மேன் படங்களில் பேட்மேனாக நடித்தவர். பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை இளமையாக காட்டியுள்ளனர். மேலும் ரிவர்ஸ் பிளாஷாக ஆல்டர்னேட் ரியாலிட்டியில் வரும் மற்றொரு பெர்ரி ஆலனும் கவனம் ஈர்க்கிறார். சூப்பர்மேனுக்கு பதிலாக இந்த படத்தில் சூப்பர் வுமென் அறிமுகம் ஆகிறார். மொத்தத்தில் சூப்பர்ஹிரோ ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைய உள்ளது தி பிளாஷ்.
பிளாஷ் படத்தின் தமிழ் ட்ரெய்லரை காண…