அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் பிரபலமான வசனத்தை மேடையில் பாடகர் ஒருவர் சொன்னதால் பாடகரின் ரசிகர்களுக்கும், அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கே-பாப் என்பது கொரியாவின் பிரபலமான இசைவகை. இந்த இசை வகையில் பாடப்படும் பாடல்கள் உலகம் முழுக்க ரொம்ப பிரபலம். சில வருடங்களுக்கு முன்னால் உலக அளவில் ட்ரெண்ட் ஆன “கங்னம் ஸ்டைல்” பாடல் இந்த வகையை சேர்ந்ததுதான். கே-பாப் இசை பாடகர்களில் உலக அளவில் மிகவும் பிரபலமானவர் கொரிய பாடகர் ஜின். அதனால் அவர் பெயரே கே-பாப் ஜின் என்றுதான் அழைக்கப்படுகிறது.
சிறிது நாட்கள் முன்னால் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களை பார்த்து “ஐ லவ் யூ 3000” என்று கூறினார். இந்த வசனம் உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோ டோனி ஸ்டார்க் பேசும் வசனமாகும். ஜின் பேசும் அந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து #WeLoveYou3000 என்ற ஹேஷ்டேகை பிரபலப்படுத்தினர்.
இதனால் கடுப்பான அயர்ன் மேன் ரசிகர்கள். அந்த வசனத்தை ஜின் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி கொள்கிறார். அயர்ன்மேனை தவிர யாருக்கும் அந்த வசனம் பொருந்தாது என ட்விட்டரில் அதே ஹாஷ்டேகில் டோனி ஸ்டார்க் புகைப்படத்தை பதிவிட்டு ஜின் ரசிகர்களை திட்டி வருகின்றனர்.
இதனால் உளகளவில் #WeLoveYou3000 ஹேஷ்டேகுகள் பிரபலமாகியுள்ளன. ஜின் ரசிகர்களை தாண்டி ஜின்னையும் கழுவி ஊற்ற தொடங்கி விட்டார்கள் அயர்ன் மேன் ரசிகர்கள். சும்மா இருப்பார்களா ஜின் ரசிகர்கள். அவர்களும் தங்கள் பங்குக்கு அர்ச்சனை செய்ய ட்விட்டரே யுத்தகளமாக மாறி போயிருக்கிறது.