உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உடாகலாம்.
பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
செம்பருத்திப் பூவை நடுவில் உள்ள மக்ரந்தத்தை தவிர்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டைசூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
தண்டுக் கீரையுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.
நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.
இரத்தம் சுத்தமாக இது கொஞ்சம் விலை உயர்ந்த மருந்து. காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.