தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - தேவைக்கு ஏற்ப (தட்டி கொள்ளவும்)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு திக்காக பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெய்யில் விழும்படி தேய்த்து விடவேண்டும். சிவந்து பொன் நிறமாக வந்ததும் எடுத்துவிடவும். இத்துடன் எண்ணெய்யில் பொரித்த வேர்க்கடலை, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் பூண்டை எண்ணெய்யில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக கலந்துவிட்டால், நன்கு கரகரப்பான காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாதவாறு எடுத்து வைத்துக்கொண்டால் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.