Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சுவையான நெல்லிக்காய் கொஜ்ஜு செய்வது எப்படி?

Nellikai Kojju
, வியாழன், 23 நவம்பர் 2023 (09:12 IST)
நெல்லிக்காயை பலரும் சாதாரணமாக உப்பு வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் நெல்லிக்காயை வைத்து சூப்பரான உணவு வகையே செய்யலாம். சுவையான நெல்லிக்காய் கொஜ்ஜு செய்வது எப்படி என பார்ப்போம்.


 
  • தேவையானவை: பெரிய நெல்லிக்காய், நல்லெண்ணெய், பெருங்காயம், வெந்தயம், காய்ந்த மிளகாய், புளிக்கரைசல், மஞ்சள் தூள், கடுகு, உப்பு தேவையான அளவு
  • வெறும் கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை வறுக்க வேண்டும்.
  • பிறகு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மிளகாயையும், பெருங்காயத்தையும் வறுத்து வெந்தயத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் நெல்லிக்காய் துண்டுகளை வதக்கவும்.
  • முழுவது எண்ணெய்யில் வதக்கினால் சுவை கூடும். எண்ணெய் ஆகாதவர்கள் லேசாக வதக்கிய பின் தண்ணீர் சேர்த்து வேக விடலாம்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்த வெந்தய பொடியை சேர்த்து இறக்கவும்.
  • மண் சட்டியில் செய்தால் கூடுதல் சுவையை தரும் இந்த நெல்லிக்காய் கொஜ்ஜு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூட்டைப் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்டியடிக்க எளிய வழிகள்!