Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலக்கலான சுவையில் உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய...!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
உருளைக்கிழங்கு - 3
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
முட்டை - 2
பிரட் துண்டுகள் - 2 அல்லது 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1

செய்முறை:
 
குக்கரில் உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும். பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு வெள்ளைப் பகுதியை மிக்ஸ்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். 
 
பிறகு கரம் மசாலா சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். ஆறியதும் மசாலாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி பிரட் தூளில் பிரட்டி தட்டி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கட்லெட்களை முட்டை கலவையில் டிப் பண்ணி போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான கட்லெட் தயார். தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments