Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 பவுண்டரி, 24 சிக்சர்: மைதானத்தை களோபரமாக்கி சாதனை படைத்த வீரர்கள்!!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:05 IST)
இந்தூரில் நடந்த 22 வது லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 
 
இந்த லீக் போட்டியில் இரு அணி வீரர்கள் சேர்ந்து மொத்தமாக 264 ரன்கள் விளாசினர். இரு அணி பேட்ஸ்மேன்களும் சேர்ந்து மொத்தமாக 30 பவுண்டரி (120 ரன்கள்) + 24 சிக்சர்கள் (144 ரன்கள்) என ஒட்டுமொத்தமாக 264 ரன்கள் பவுண்டரிகளிலேயே எடுத்தனர்.
 
வீரர்களின் சில சாதனை துளிகள்:
 
# மும்மை வீரர் நிதிஷ் ரானா, ஐபிஎல் அரங்கில் பவுண்டரிகள் அடிக்காமல், 7 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
 
# பஞ்சாப் வீரர் மார்ஷ், ஐபிஎல் அரங்கில் மும்பை அணிக்கு எதிராக 500 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 
 
# மும்பை வீரர் பட்லர், டி-20 அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
 
# இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் ஆறு ஓவரில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பட்லர், பார்த்தீவ் ஜோடி பெற்றது.
 
# மும்பை அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார் பஞ்சாப் வீரர் ஆம்லா.
 
# ஐபிஎல் போட்டியில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரணடாம் இடத்தை பிடித்தார் ஆம்லா. மலிங்கா பந்தில் மட்டும் 51 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
# பஞ்சாப் அணி 15, 16 வது ஓவர்களில் மட்டுமே மொத்தமாக 50 ரன்கள் விளாசியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments