இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போல, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ், வங்காளதேசத்தில் டி20 பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய வீரர்களை தவிர அனைத்து நாட்டின் வீரர்களும் கலந்து கொள்வார்கள்.
இந்த தொடர்களில் இந்திய அணியின் வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி தருவதில்லை. இதனால் இந்தியாவில் உள்ள திறமையான வீரர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாடுவதில்லை.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல், இந்தியாவில் சிறப்பாக விளையாட கூடிய நிறைய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே அவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்றால் அவர்கள் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவத்தை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.