Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை!

Advertiesment
மும்பை
, வியாழன், 2 மே 2019 (19:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் முக்கிய போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ள முடியும். சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் இரண்டு அணிகளில் ஒன்று எது என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் இன்றைய வெற்றிக்கு தீவிர முயற்சி செய்யும்
 
 இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரில் பெரும்பாலும் டாஸ் வெற்றி பெறுபவர்கள் பந்துவீச்சை தேர்வு செய்து வரும் நிலையில் ரோஹித் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.

 இன்றைய மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி விளையாடுவதாகவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐதராபாத் அணியில் குப்தில் மற்றும் பாசில் தம்பி அணியில் இணைந்துள்ளனர். 
 
மும்பை
ஐதராபாத் அணி: குப்தில், சஹா, பாண்டே, முகமது நபி, வில்லியம்சன், ரஷித்கான், விஜய்சங்கர், அபிஷேக் சர்மா, புவனேஷ்குமார், அகமது மற்றும் பாசில்தம்பி ஆகியோர் உள்ளனர். 
 
 மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, லீவீஸ், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, சிரன், சாஹர், மலிங்கா, பும்ரா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் வசனம் மூலம் வெற்றிக்களிப்பு – பஜ்ஜி டிவிட் அலப்பறைகள் !