இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனுமான விராட் கோலி . 6000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்-2021 14 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கோலி 72 ரன்களும் படிக்கல் 100 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் கோலி புதிய சாதனை படைத்தார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் 6021ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி . 6000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா 5000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.