இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சேவைகளில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தங்கள் ரீசார்ஜ் ப்ளான் கட்டணங்களை உயர்த்துவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் ப்ளான்களை 7 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜூலை முதல் இந்த புதிய ரீசார்ஜ் கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வால் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் ப்ளான் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஏர்டெல்லில் அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கும் பேசிக் ப்ளான் 265 ரூபாயாக இருந்த நிலையில் இந்த புதிய கட்டணத்தின்படி 299 ரூபாயாக நிர்ணயிக்கபட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1 ஜிபி வழங்கும் டேட்டா ப்ளான் ரூ.19 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.22 ஆக உயர்ந்துள்ளது. ஏர்டெல்லின் பழைய ரீசார்ஜ் கட்டணமும், புதிய கட்டணமும்..: