தனிநபர் தரவுகள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போதைய் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு செயல்பாடுகளையும் செல்போன் மூலமாகவே மேற்கொள்ள முடியும் என்றாலும், செல்போனில் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் சேவைகளால் தனிநபர் தகவல்கள் பெறப்படுகிறது. இவை தவறான வழியில் பயன்படுத்தப்படும் அபாயத்தை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தனிநபர் தரவுகளை பெறும் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும், ஓலா, ஊபர், ட்ரூ காலர் போன்ற செயலிகள் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் அளிக்க நிறுவன பிரதிநிதிகளை நேரில் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.