உலகில் பல நாடுகளில் மக்களின் இணையதமான கூகுள் உள்ளது. அதற்கு அதன் அதிவேக தகவல்கள் வழங்கும் திறன்,.மற்றும் நம் தேவைகளை நிறைவேற்றும் அதன் தொழில்நுட்பம் இவையே காரணமாகச் சொல்லப்படுவதுண்டு.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை விரையில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் இதுகுறித்த ஒரு டீசர் வெளியிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கூகுள் அறிமுக செய்த கூகுள் ஹோம் மாடலின் மேம்பட்ட ரகமாக இது கருதப்படுகிறது. கூகுள் நெஸ்ட் ஸ்பீக்கரில் டூயல் வைபை 30 வாட் டிசி சார்ஜர் வழங்கப்படுவதாகவும், முதலில் வழங்கியதை விட பெரிய டிரைவர்கள் இதற்கு வழங்கபடும் என தெரிகிறது.
குறிப்பாக இந்தகூகுளின் நெஸ்ட் ஸ்பீக்கர் கூகுளின் பிக்சல் 4 ஏ ஸ்மார்ட் போனுடன் அறிமுகம் ஆகலாம அல்லது கூகுளில் ஏ 5 மாடல் அறிமுக விழாவிலும் இது அறிமுகம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகிறது. இது இளைஞர்களைக் கவரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.