புகழ்பெற்ற நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது குறைந்த விலையில் Nokia G42 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது நோக்கியா நிறுவனம் தனது புதிய Nokia G42 5G ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Nokia G42 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
6.52 இன்ச் ஐபிஎஸ் ஸ்க்ரீன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட்
-
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 480+ சிப்செட்
-
ஆக்டாகோர் ப்ராசஸர்
-
4 ஜிபி ரேம் + 2 ஜிபி விர்ச்சுவல் ரேம்
-
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
-
50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
-
8 எம்பி முன்பக்க செல்ஃபி கேமரா
-
ஆண்ட்ராய்டு 13, 5ஜி
-
5000 mAh பேட்டரி, 20 W பாஸ்ட் சார்ஜிங்.
இந்த Nokia G42 5G பிங்க், க்ரே, பர்ப்பிள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.12,599 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.