Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசத்தாலான விலையில் OnePlus Nord CE4 5G! உடன் Nord Buds 2R இலவசம்! – என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

Prasanth Karthick
வியாழன், 4 ஏப்ரல் 2024 (12:39 IST)
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமான நிறுவனமான ஒன்ப்ளஸ் தனது புதிய OnePlus Nord CE4 ஸ்மார்ட்போனை பல சிறப்பு சலுகைகளோடு அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை OnePlus நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் சற்று அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களையே விற்பனை செய்து வந்த ஒன்ப்ளஸ் சமீபமாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது ரூ25,000க்குள் பட்ஜெட் விலையில் புதிய OnePlus Nord CE4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

OnePlus Nord CE4 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.7 இன்ச் அமேலெட் ஸ்க்ரீன்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 ஜென்3 சிப்செட்
  • 2.63 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14,
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை சப்போர்ட் செய்யும் ஹைப்ரிட் மெமரி கார்ட் ஸ்லாட்
  • 50 MP (Sony LYT-600) + 8 MP டூவல் ப்ரைமரி OIS கேமரா
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5500 mAh பேட்டரி, 100 W SUPERVOOC சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்

 
இந்த OnePlus Nord CE4 5G ஸ்மார்ட்போனில் FM Radio, 3.5 mm ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட வசதிகள் கிடையாது. டைப்-சி – ஹெட்போன் கன்வெர்டர் மூலம் வயர்ட் ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

இந்த OnePlus Nord CE4 5G ஸ்மார்ட்போன் Celedon Marble, Dark Chrome ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.24,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.26,999 ஆகவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த OnePlus Nord CE4 5G ஸ்மார்ட்போனுடன் அறிமுக சலுகையாக ரூ.2,199 மதிப்புள்ள OnePlus Nord Buds 2r இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச சலுகை இன்று (ஏப்ரல் 4) மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments