மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்குகள், அந்நிய செலாவணி, பணம் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்துக்களால் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாப்படும். அன்று சிவனுக்காக விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்வார்கள். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
தமிழகத்தில் கூட கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகா சிவராத்திரி என்பதால் வட இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்ப்ட்டுள்ளது. இதனால் பங்கு சந்தை, அந்நியச் செலாவணி வர்த்தகம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.