Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலையில் வெளியாகும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்! – முழு லிஸ்ட் இதோ!

Advertiesment
July 2023 Upcoming smartphones
, வியாழன், 29 ஜூன் 2023 (09:25 IST)
இந்தியாவில் பல மாடல் ஸ்மார்ட்போன்களும் வெளியாகி வரும் நிலையில் இந்த ஜூலை மாதத்தில் அட்டகாசமான பல ஸ்மார்ட்போன் மாடல்கள் களம் இறங்க உள்ளன.



இந்தியா முழுவதும் 5ஜி மயமாகிவிட்ட நிலையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தில் இந்திய பயனாளர்களை குறிவைத்து பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. அவற்றில் சில முக்கியமான புதிய வரவு மாடல்கள் உங்களுக்காக..

Motorola Razr 40 & 40 Ultra:

July 2023 Upcoming smartphones

இந்தியாவில் ஃப்ளிப் மாடல் மடிக்கும் போன்களின் வரவில் புதிதாக கால் பதிக்கிறது Motorola Razr 40 & 40 Ultra. 6.9 இன்ச் பெரிய டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 1.5 இன்ச் கவர் டிஸ்ப்ளேவும் உள்ளது. இந்த Motorola Razr 40 & 40 Ultra மாடல்கள் ஜூலை 3ம் தேதி இந்ந்தியாவில் வெளியாகின்றன.

 
iQOO Neo 7 Pro:


July 2023 Upcoming smartphones

முன்னதாக பிப்ரவரியில் வெளியான iQOO Neo 7 மாடலின் ப்ரோ வெர்சன்தான் இந்த iQOO Neo 7 Pro. முந்தைய மாடல் கேமிங் பிரியர்கள் இடையே வரவேற்பை பெற்ற நிலையில் தனது புதிய மேம்படுத்தப்பட்ட iQOO Neo 7 Pro மாடலை ஜூலை 4ம் தேதி வெளியிடுகின்றனர்.

 
OnePlus Nord 3 & Nord CE 3


July 2023 Upcoming smartphones

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் என்றாலே மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக OnePlus Nord 3 மற்றும் CE 3 மாடல்கள் வெளியாகின்றன. அதி வேகமான ரேம், டைமன்சிட்டி ப்ராசஸருடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை 5ம் தேதி வெளியாகிறது.

Realme Narzo 60 Series:

July 2023 Upcoming smartphones

ரியல்மி சமீபத்தில் வெளியிட்ட Realme 11 Pro பெரும் ஹிட் அடித்துள்ளது. ஒரே நாளில் பல ஆயிரம் ஸ்மார்ட்போன்களை விற்று தள்ளிய ரியல்மி தற்போது தனது புதிய Realme Narzo 60 Series ஐ வெளியிட உள்ளது. ஜூலை 6ம் தேதி வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளது. கேமரா குவாலிட்டி சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy M34 5G

July 2023 Upcoming smartphones

ஸ்மார்ட்போன் சந்தையின் மான்ஸ்டர் என்றே இந்த Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனை சாம்சங் அறிமுகப்படுத்துகிறது. அதிகப்படுத்தப்பட்ட பேட்டரி, ஸ்பீடான ரேம் செயல்பாடு, நோ ஷேக் கேமரா என பல சிறப்பம்சங்களோடு இந்த Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் ஜூலை 7ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Phone 2:

July 2023 Upcoming smartphones

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான Nothing Phone 1ன் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக தனது Nothing Phone 2 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் ஜூலை 11ல் வெளியாகும் இந்த Nothing Phone 2 இந்திய சந்தையில் நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடகை வீட்டில் வசித்து வரும் எஸ்.ஐ. வீட்டில் திடீர் ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் சிக்கியதா?