வாட்ஸ் அப்நிறுவனம் ஏற்கனவே மொபைல் போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை அளித்துள்ளது என்பதும் இதன் மூலம் உலகத்தில் உள்ள எந்த நபருக்கும் மிக எளிதில் எந்தவித கட்டணமும் இன்றி ஆடியோ வீடியோ கால் செய்யலாம் என்பதும் தெரிந்ததே.
தொலைத்தொடர்பு துறையினர் வெளிநாட்டிற்கு மிக அதிக கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில் இன்டர்நெட் வசதி இருந்தால் போதும் இலவசமாக வாட்ஸ் அப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து கொள்ளலாம் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மொபைல் ஃபோனில் இந்த வசதி இருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக டெஸ்க்டாப்பிலும் வீடியோ கால் செய்யும் வசதியை விரைவில் கொண்டுவர இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெஸ்க்டாப் மூலம் அழைக்கும் வீடியோ காலில் எட்டு பேர் வரை பேசிக்கொள்ளலாம் என்றும், ஆடியோ காலில் 32 பேர் வரை பேசிக் கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.