இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது.
இந்நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்படி செய்வதாகவும், இதற்க்காக சிலருக்கு பொருளை வாங்குவதற்கான பணத்தை திரும்ப கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது.
மேலும் இப்படி தவறான முறையில் ரேட்டிங் போடுவதை தவிர்ப்பதற்க்காக 300 மில்லியன் பவுண்டுகளை அமேசான் நிறுவனம் செலவிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.