வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பப்பட்ட செய்தியை அழிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதுபோல அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அனுப்பிய ஒரு செய்தியை அழிக்கும் போது டெலிட் ஃபார் மி மற்றும் டெலிட் ஃபார் எவரிவொன் என்ற இரு வசதிகள் இருக்கும். இதில் தெரியாமல் டெலிட் பார் மி கொடுத்துவிட்டால், அந்த செய்தியை டெலிட் ஃபார் எவரி ஒன் கொடுக்க முடியாது. ஆனால் இப்போது வந்துள்ள புதிய வசதியின் மூலம் டெலிட் பார் மி கொடுத்த 5 வினாடிகள் ரிடு என்ற ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரி டு செய்து பின்னர் அந்த செய்தியை டெலிட் ஃபார் எவரிஒன் மூலமாக அழிக்கலாம்.