Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லிக்கு கோலிவுட் திரையுலகம் ரெட் கார்டா?

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (08:28 IST)
இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ திரைப்படம் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த திரைப்படமாகும். அதன் பின்னர் அவர் இயக்கிய ’தெறி’ மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும்  வசூல் ரீதியில் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது

குறிப்பாக ’மெர்சல்’ படத்தை தயாரித்த நிறுவனம் இன்றளவும் மீள முடியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது. அதேபோல் தற்போது அவர் இயக்கி வரும் ’பிகில்’ திரைப்படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி என்று அவர் தயாரிப்பு தரப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தின் பட்ஜெட் ரூ1850 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து அட்லீ வாக்களித்த பட்ஜெட்டில் படம் தயாரித்ததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், இனிமேல் அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றும் இரகசிய ரெட்கார்ட் போட்டுள்ளதாக செய்தி கசிந்து வருகின்றது

இந்த நிலையில் ’பிகில்’ திரைப்படத்தை முடித்துவிட்டு ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை அவர் இயக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

எனவே அட்லியின் அடுத்த படம் தமிழ் படம் இல்லை என்பது மட்டும் உறுதி ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments