டிவி நடிகருக்கு ஜோடியாக நடித்து அக்கட தேசத்தில் ஒதுங்கியவர் அவர், அங்கு பெரும் புகழ் பெற்று பின்னாளில் தமிழில் அரசியல் வாரிசு நடிகருக்கு, ஜோடியாக நடித்தார்.
அது சரியாக போகவில்லை எனினும் அவருக்கு தமிழ், தெலுங்கில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அம்மணிக்கு அக்கட தேசத்தையும் தாண்டில் பாலிவுட்டில் புகழ் பெறணும் என்று ஆசை.
அதற்காக அவர் யாருமே நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் இன்னொரு பாலிவுட் நடிகையும் நடிக்கிறார். இந்த மாதிரி படத்தில் நடித்ததால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறும் அந்த நடிகை, இதில் என் நடிப்பு திறமையை காட்ட வாய்ப்பு இருக்கிறது. என இந்த படத்துக்கு பின் இந்தியிலும் பரபரப்பாக பேசப்படுவேன் என்று நம்பிக்கையாக கூறுகிறார்.