Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அன்புடையார் எல்லாம் தமக்கு உரியர் - சிறப்புக்கட்டுரை

annai therasa
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (00:09 IST)
அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்று வள்ளுவப் பேராசான் 2000 ஆண்டுகாலத்திற்கு முன் சொல்லிச்சென்ற குறள்தான் எத்தனை புதுமையாக எத்தனை எத்தனை தலைமுறைகளைத் தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த அன்பு புதுப்பொழிவுடன் தான் வீற்றிருக்கும்.. நேற்று  ஒரு  அமெரிக்கப் பெண் தன் நாட்டின்  இந்தியப் பெண்ணைக் கண்ட மாத்திரத்தில் கண்டபடி திட்டி,  உங்கள் நாடிருக்க இங்கே ஏன் இருக்கிறீர்கள் என வார்த்தைகளால் அவரை வசைபாடியிருக்கிறார்.

இந்த வீடியோ ஒட்டுமொத்த சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தையும் ஆக்ரமித்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மனிதன் வாழ்வதற்கான பூமியிலிருந்துகொண்டு, அடுத்தவர்களை வாழக்கூடாதென்று கூறுவதற்கு யாருக்குமில்லை.

இந்த அமெரிக்கப் பெண் சமீபத்தில் தன் நாட்டிலுள்ள தலைப்புச்செய்திகளையே பார்த்திருக்கமாட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்கா முன்னாள் பிரதமர் ரொனால்ட் ரீகன் அமைச்சரவையில் ஒருவர்  இந்தியர் அதிகாரிகளாக நியமிக்கட்டார்.

இதையடுத்து, ஒபாமா ஆட்சியில் இதன் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது. இதையடுத்து, டொனால்ட் டிரம்பின் ஆட்சியின்போது, இது 80 ஆக அதிகரித்து, தற்போது, பைடன் ஆட்சியின் அந்த நாட்டிலுள்ள முக்கிய பதவிகளில் அதாவது துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் முதற்கொண்டு இன்னும் சில பதவிகளில், இந்தியர்கள் 130  மேற்பட்டவர்கள் அலங்கரித்துவருகின்றனர்.

சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு மாகாணத்தில் நீதிபதியாகவும்  நியமிக்கப்பட்டார்.    நம்மை 230 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த   இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரதமர் வேட்பாளராகத் தேர்வாகியுள்ளார். கனடாவில் இந்தியர்கள் நிரம்பியுள்ளனர். இந்த தேசத்தில் மட்டுமல்லாது அனைத்து தேசத்திலும் இந்தியர்கள் தங்கள் அறிவால்  அனைத்துத் துறைகளிலும் ஆளுகை செய்து வருகின்றனர்.

பல  நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கக் குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தபோது,  இந்தியாவைச் சேர்ந்திய தி கிரேட் காளியின் வருகைக்குப் பின் தான் இந்தியர்களும் அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்க முடியும் என்ற உண்மையை இந்தியர்களும் உணர்ந்தனர்.

இப்படி, எந்தத் துறை புதிதாக இருந்தாலும் அதில் தங்களில் திறமையைப் புகுத்தி, அறிவாற்றலைச் செலுத்தி, தங்களின் ஆற்றலை வெளிப்படித்தி,நாடு விட்டு  நாடு, கண்டம்விட்டுக் கண்டம் சென்று இந்தியர்கள் சோழர்களைப் போல் தங்களின் அறிவாற்றால் உலகை ஆளுகை செய்து வருகிறார்கள் என்பதற்கு, தற்போதைய முன்னணி  நிறுவனங்களான பெப்சி- இந்தியா நூயி; மைக்ரோ சாப்ட் – சத்யா நாத்தெல்லா; கூகுள் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்- சுந்தர் பிச்சை; டுவிட்டர் சத்தியப் பிரதான் சாகூ; போன்றோரே சாட்டிகளாக உள்ளனர்.

இவர்களுக்கு முன், பல ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்திற்குச் சென்று ஹார்டியின் உதவியால் தன் கணக்குச் சமன்பாடுகளைச் சமர்பித்து,ஃபெல்லோஷிப் பட்டம் பெற்றபோது, இந்தியர்களின் மூளை என்னவென்று தெரிந்திருக்கும்?

அதன்பின், ஒரு ஆயுதப்புரட்சி செய்து அனைத்து உலகினையும் தங்கள் ஆளுகைக்குகீழ் காலனிய நாடுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த விக்டோரிய பேரரசியின் ராஜ்ஜித்தின் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சர்ச்சிலையே தன் அரையாடையின் மூலமும் அஹிம்சை பேச்சிலும், அறிவார்ந்த செயலிலும், எழுத்தாற்றலும் , நீடித்த பொறுமையிலும் இந்தியாவின் தன் அஹிம்சை தோன்றியதென்பதற்கானதொரு முன்னுதாரணப் புருஷராய் புத்தர் பிறந்த மண்ணில்  இருந்து  நவீன புத்தராக மாறி தன் வாழ்க்கையே அஹிம்சை வழியில் வாழ்ந்து சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், போராட்ட வீரர்களினால்தால்தானே  இந்தியாவின் விடுதலை சாத்தியம் ஆயிற்று?

இந்தியாவில் விடுதலைக்கு அஹிம்சையை ஆயுதாக ஏந்திய காந்தியின் கொள்கையைத்தானே அமெரிக்காவின் எக்ஸ் மால்கம் மற்றும் ஜூனியர் மார்டின் லூதர் கிங் தங்களின் வாழ்க்கையில் கடைபிடித்தனர்.

இந்தியாவில் இருந்து புத்தகரின் சீடராக இருந்து, அவரிடமிருந்து எடுத்துக்கொண்ட கொள்கைகை உள்முகத்தன்மையுடன் சீனாவுக்குக் கொண்டு சென்ற போதிதர்மரின் போதனைகளும் அவரது தற்காப்பு முறைகளும்தானே இன்று அங்கு குங்பூ, உள்ளிட்ட கலைகளாகப் பரிமளித்துள்ளது.
webdunia

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் இருந்துதானே பண்டைக் காலத்தில், தங்கமும் வெள்ளியும் கொண்டு வந்து கொட்டி, இங்குள்ள கருமிளகை மூட்டைகளில்  கொண்டு சென்றனர்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போதுதானே வணிக வர்த்தகமும், பூமியில் இத்தனை தனித்துவமிக்க மக்கள் ஒவ்வொரு கண்டங்களில் அந்தக் கண்டங்களின் நிலப்பரப்பில் பிரதேசங்களுக்கேற்ப மொழி, உடை  கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களுடன் கொண்டு இருப்பது மற்ற பகுதிகளில் இருப்போருக்குத் தெரிந்தது?

அகிலை இந்தியாவில் இருந்து எடுத்துக் கொண்டு வரவேண்டுமென்று தன் ஆசிரியரிடம் சபதமிட்ட அலேக்சாண்டருக்கு, அதற்கேற்ற பருவம் வந்து, தன் படைகளும் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது, அவரை எதிர்த்த போரஸ் என்ற மாவீரனை அதனால்தானே அவரால் கண்டுகொள்ள முடிந்தது.

வாஸ்கோடாகாமாவில் இந்திய வருகை தானே அவர்களின் ஐரோப்பிய வருகைக்குப் புதிய அடிகோலிட்டது.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்றைய அமெரிக்கா என்ற வல்லரவு கனவிலும் நினைத்துப்பார்க்கவியலுமா?

அப்படிப்பட்ட உலகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதனால் தான் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புற நானூற்றில் இடம்பிடித்த தமிழ்புலவன் கனியன் பூங்குன்றனார், உலத்தமிழர்களின் இதயத்தில் மட்டுமின்றி உலகம் உள்ள வரையில் இந்த யாதும் ஊரே யாதும் கேளீர் என்ற ஒற்றை வார்த்தைக்காகவே வள்ளுவன்போல  நிலைத்திருப்பான்.

இந்த மாதிரி இதயத்தை அன்பால் நனைக்கவும், பண்பினால் மனிதம் திளைக்கவும் செய்கிற இலக்கியப் படைப்புகள் அயல் நாட்டில் இல்லையோ என்றே கேள்வி எழுப்புகிற படிதான் அந்த அமெரிக்கப் பெண், தன்  நாட்டிலுள்ள  இந்தியப் பெண்ணை உதாசீசனப்படுத்தி, அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார்.

இதுவும் ஒரு வகையான இனப்பாகுபாடுதான்.

அல்பேனிய   நாட்டைச் சேர்ந்த ஆக்னஸ் இந்தியத் திரு நாட்டிற்கு வந்து  இங்குள்ள நிலைப்பாட்டை கண்ணுற்றதனால்தான் தன் கருணைச் சுரங்கமான தாயுள்ள மனதுடன்  அன்னை தெரவாசாக மாறினார்.

இந்தியாவிலேயே 50 களில் திராவிடர்களை வட  மா நிலத்தவர்கள் மதிக்காமல் இருந்ததுண்டு. இதையெல்லாம் பெரியார்  பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணா நிதி, சத்திய மூர்த்தி, சில்வர் டங்க் சீனிவாசன் வலம்புரி ஜான்  உள்ளிட்ட தலைவர்களும், திராவிட கட்சிகளும் மாற்றி தமிழகத்தை தலைசிறந்த அறிவாளுமையால் உயரவைத்தன.

அதனால், எங்கிருந்தால் ஒவ்வொரு நாட்டுச் சட்டப்படி அங்கு இருப்பதற்கான உரிமைகளைப் பெற்ற பின், வாழும் தகுதியைப் பெற்ற பின் எதற்கு இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மீண்டும் பிந்தங்கிய இனவாதம் தட்டியெழுப்ப வேண்டும்?
webdunia

விஷப்பாம்பு என்று தெரிந்தும் அதைத் தலையில் தூக்கி வைத்தல் அது எந்த நேரத்திலும் கொட்டும் என்பது அதைத் தூக்கி வைப்பவருக்குத் தெரிய வேண்டும்!  இந்த இனபேதமும் அப்படித்தான்.

அன்பினால் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர்  பிறர்க்கு! அதனால், புரூஸ்லிக்கும், ஜாக்கிஷானுக்கும், ரஜினிகாந்திற்கும்  உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அன்னை தெரசாவை தன்னை  பெறாத அன்னையாக அனைவரும் பார்க்கின்றனர்.

#சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளை போக்குமா கருஞ்சீரகம்...?