உலகில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்கின்றனர். இன்று புதிதாய்ப் பல லட்சம் குழந்தைகள் பிறக்கிறார். அதேபோல், வயது முதிர்வு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல லட்சம் மக்கள் தினமும் உயிரிழக்கிறார்கள்.
பூமியில் ஒரு மனிதன் சுகித்து வாழ்வதும், அவன் தன் ஆயுட்கால வாழ்க்கையை அனுபவித்துவிட்டு பூலோகத்தைத் துறந்து செல்வது எல்லாம் விதியென்று கூறியது ஒரு காலமாக இருந்தாலும், இன்று அந்த வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது.
ஆதிகால மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறைக்குள் தன்னை பிணைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தான். காலப்போக்கில், அந்த இயற்கையைத் தின்று விழுங்கிக் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்ற மனிதன், கடைசியில் தான் குரங்கிலிருந்து வந்ததையே மறந்துபோனான்.
ஆதி கால மனிதனின் வாழ் நாள் என்பது குறைந்திருந்தது. அவன், தன் கைக் கருவிகள் மற்றும் இயற்கையின் கற்களைக்கொண்டு, வேட்டையாடிய விலங்குகளைச் சேகரித்து வைத்து, அதன் அடிப்பட்டபாகங்களும் உள்ளுறுப்புகளும் அழுகியதா ? இல்லையா அறிந்துகொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் பெறும் முன், பச்சை இறைச்சிகளையும் சுத்தப்படுத்தாத உணவுகளையும் விலங்கோடு விலங்காகத் தின்று வந்திருக்கிறான்.
சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தக் ஹோமோ சேப்பியன்ஸ் தோன்றியதால், அதன்பின்ம், அவனது உணவு முறையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கும்.
அதுவே காலமாற்றத்தின் படி, பல்வேறு பரிணாமங்களைக் கடந்து, இன்று உலகமே நாகரீகயுகத்தில் மூழ்கிக் கிடத்தாலும், இன்றும் தமிழ் டிரக்கர் என்ற யூடியூப்பரின் சேனலில் காட்டிய மாதிரி, ஆதிப்பூர்விகக் குடிகளின் மிச்ச சொச்சம் இன்றும் பூமியின் எங்காவது ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பார்கள்!
உலகின் நுரையீரலான அமேசான் காட்டில் தன்னந்தனியே வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மனிதனின் சமீபத்திய மரணம், இனிமேல் அந்த மாதிரி காட்டினைப் பாதுகாக்க யாருமில்லையே எனத் தோன்றும் போது, அசாம் மா நிலத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங்க் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் ஒரு பரந்த காட்டையே உருவாக்கிய மாதிரி மனிதர்களில் ஒரு மாணிக்கவும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்.
ஆக்கத்திற்கென்று பிரம்மன் என்றால் அழிப்பதற்கென்று ருத்ரன் இருப்பது போல் நமது ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் நடத்தைக்குமான பாலமான நம் குண நலன்கள் இருக்கும்போது, அந்த ஆக்கப்பூர்வமான குணவளத்திற்கான ஒருபொது ஊட்டமான இருப்பது நாம் உண்ணும் உணவும், அதன் மூலம் மனதைப் பக்குவப்படுத்தி உடலைக்தன் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான்.