அதிமுக அரசு தேர்தல் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் போடுவதற்கு முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என எதிர்க்கர்ட்சிகள் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில் தமிழகத்தில் அங்கிகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொருக் கட்சியின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு குறைகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
அதில் அதிமுக மீது திமுக வைத்துள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டாக தபால் ஓட்டுகளை அரசு முடக்கப்பார்ப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அரசு ஊழியர்கள் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் கடந்த காலத்தில் நடந்தது. இதை எடப்பாடி தலைமையிலான ஆளும் கட்சி முறையாக எதிர்கொள்ளவில்லை. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் இழுத்தடித்தது.
அதனால் அரசு ஊழியர்கள் அதிமுக அரசு அதிருப்தியில் உள்ளனர். இதனால் அரசு ஊழியர்களின் வாக்குகள் தங்களுக்கு விழாது என நினைக்கிறது அதிமுக. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் தேர்தல் ஆணையர்களிடம் புகார் அளித்துள்ளார்.