தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறயுள்ளது. இன்னும் 4 நாட்களில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையயுள்ளது.
இதனால், கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உடபட்ட திருப்பாலைக்குடி அருகே உள்ள மணக்குடி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார்.
ஏற்கனவே அவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், இந்த இடத்தில் மக்கள் சற்று ஆக்ரோஷமாகி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வந்த வாகனத்தின் மீது கற்களை வீசினர்.
ஆனால், பாஜக மற்றும் அதிமுகவினர் தங்களுக்கு வரும் எதிர்ப்புகளை வழக்கு பதிவு செய்யாமல் மறைத்து வருகின்றனர். ஏனெனில், மக்கள் எதிர்ப்பை இவர்கள் வெளிகாட்ட விரும்பவில்லை. அதே போல் இந்த சம்பவத்தையும் மறைக்க நினைத்தனர்.
ஆனால், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் பாஜக மீது தமிழக மக்களுக்கு உள்ள எதிர்ப்பு அப்பட்டமாக வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர், நயினார் நாகேந்திரன் பெரியபட்டினத்தில் வாக்கு சேகரித்த போது மர்ம நபர் அவரை நோக்கி பாட்டிலை வீசினார். அந்த பாட்டில் அவர் அருகே நின்று கொண்டிருந்த அதிமுக நிர்வாகி மீது விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.