வாகன சோதனையின் போது டிடிவி தினகரன் தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பரப்புரையில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்களின் பெயரை மாற்றி சொல்லியும், கட்சியின் சின்னத்தை மாற்றி கூறியும் அக்கப்போர் செய்து வருகின்றனர்.
வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே சோதனை நடத்தி கோடிக்கணக்கான பணத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சேலத்தில் பரப்புரை செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனின் வாகனத்தை சோதனைக்காக தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தினர். ஆனால் அவரது கார் நிற்காமல் சென்றுவிட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீஸார், தினகரன் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.