Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டம் கட்டிய ஐடி ரெய்ட்; கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்; கடுப்பான துரைமுருகன்!

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (11:47 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. 

 
சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார்.
 
இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்தார். இன்று மீண்டும் வருமான வரி சோதனைகள் நடைபெறுகிறது. வேலூரில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் வார்ட் நம்பர் குறிப்பிட்டு மூட்டை மூட்டையாக  பணம் சிக்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாலர் துரைமுருகன் மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் ஒரு முறையீட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த முறையீட்டை மனுவாக நாளை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
 
மனுவில், தேர்தல் நேரத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகளால் பிரச்சாரத்திற்கு சரிவர செல்ல முடிவதில்லை, எனவே எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கதிர் ஆனந்த் கோரிக்கை விடுக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments