Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒரே ஒரு வாக்காளர் உள்ள வாக்குச் சாவடி –விழி பிதுங்கும் தேர்தல் ஆணையம் !

ஒரே ஒரு வாக்காளர் உள்ள வாக்குச் சாவடி –விழி பிதுங்கும் தேர்தல் ஆணையம் !
, திங்கள், 18 மார்ச் 2019 (13:56 IST)
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைத்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் இரண்டும் ஒன்றாக ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த மொத்தம் 7.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த மாநிலத்தில் சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களின் அனைவரின் பெயரும் வேறு வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்பட்டு விட்டன. ஆனால் ஜனில் தயாங், சொகேலா தயாங் என்ற தம்பதிகளின் பெயர்கள் மட்டும் வேறு வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்படவில்லை. 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, இவர்கள் இருவருக்கு மட்டும் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இப்போது  ஜனிலின் பெயர் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் சொகேலா தயாங் பெயர் மட்டும் இன்னமும் அதே வாக்குச்சாவடியில் தான் உள்ளது. இந்த ஒருவருக்காக மட்டும் இப்போது அங்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முறையான சாலை வசதிகள் இல்லாத அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் பொருட்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த பெண் எப்போது வாக்களிக்க வருவார் எனத் தெரியாத காரணத்தால் அந்த வாக்குச்சாவடியைக் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைத் திறந்து வைக்கவேண்டியக் கட்டாயமும் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு