Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி – சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையம் !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (11:32 IST)
தேர்தல் பரப்புரை செய்ய மோடி பயன்படுத்தும் ஹெலிகாப்டர் விதிமுறைகளை மீறியதா என சோதனை செய்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சென்றிருந்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் கர்நாடகாவை சேர்ந்த முகமது மோசின் எனும் ஐஏஎஸ் அதிகாரியாகும். இவர் மோடியின் ஹெலிகாப்டர் விதிமுறைகளுக்கு உட்பட்டதா என சோதனை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரை மீறி இந்த சோதனையை முகமது மோசின் செய்தார். இதனால் மோடியின் பயணம் 15 நிமிடம் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இது சட்டவிரோதமானது என அம்மாவட்ட ஆட்சியர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இதையடுத்து முகமது மோசின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ’சிறப்புக்காவல் படையினர் இருக்கும் இடத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. எனவே விதிமுறைகளை மீறி முகமது மோசின் சோதனையிட்டுள்ளார். அதனால் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்’ எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர்களின் ஹெலிகாப்டர்கள் சோதனையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments