தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ஓபிஎஸ் மகன் ரவிந்தரநாத்.
முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரச்சாரம் 16 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அரசியல்வாதிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி தொகுதியில் இந்தமுறை ஓபிஎஸ் தனது மகனை மக்களவை வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்துகிறார். தனது மகனுக்காக தான் மட்டுமல்லாது அதிமுகவில் முக்கியத்தலைகள் முதல் மோடி வரை தேனிக்கு அழைத்துச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரை கொண்டு வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வைக்கிறார்.
இந்நிலையில் இன்று தமிழகம் வந்துள்ள மோடி தேனியில் ஓபிஎஸ் மகன் ரவிந்தரநாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய தேனி வந்தார். அப்போது மோடியின் காலில் விழுந்து ரவிந்தரநாத் ஆசி வாங்கினார். அதைப்பார்த்த மற்ற வேட்பாளர்களும் மோடி காலில் விழ பிரச்சார மேடை உணர்ச்சிப் பூர்வமான மேடையாக மாறியது.