Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அமேதியில் ராகுல் வேட்புமனுவில் சிக்கல் – இன்று விசாரணை !

அமேதியில் ராகுல் வேட்புமனுவில் சிக்கல் – இன்று விசாரணை !
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (10:43 IST)
அமேதி தொகுதியில் வேட்புமனு செய்துள்ள ராகுல் காந்தியின் வேட்புமனுவில் கல்வித்தகுதி மற்றும் குடியுரிமை தொடர்பான சந்தேகங்கள் எழுந்துள்ளதால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூன்றாவது முறையாக அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் கடந்த வாரத்தில் வேட்புமணுத்தாக்கல் செய்தார். ஆனால் அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் மீது சந்தேகம் இருப்பதால் அதை விசாரித்த பின்னரே அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என அத்தொகுதியில் போட்டியிட இருக்கும் சுயேட்சை வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரில் ‘ பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் இணையதளத்தில் ராகுல் காந்தி அந்த நாட்டின் குடிமகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ராகுலின் கல்வித்தகுதியும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதியும் வேறுபடுகின்றன.’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பாஜக போன்ற கட்சிகள் கையில் எடுத்து விவாதமாக்கியுள்ளன.

இதையடுத்து அமேதியின் தேர்தல் அதிகாரி, ராகுலின் மனு மீது நேற்று சனிக்கிழமை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். ராகுல் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் திங்கட் கிழமை(இன்று) வரை அவகாசம் கேட்டுள்ளார். இன்று இது தொடர்பான விசாரணை நடைபெற இருக்கிறது. இதையடுத்தே அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது உறுதியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்: பெண்போலீஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு!!!