Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து! காரணம் இதுதான்!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (07:41 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும் சட்டமன்ற இடைத்தேர்தலும் வருவதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் முக ஸ்டாலினும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்வரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலை மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இருப்பினும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களான பிரேமலதா, தமிழிசை, ராம்தாஸ், அன்புமணி, உள்பட பல தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments