தேர்தலில் போடியிடும் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ்.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.
இதில் எல்லா கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் மட்டும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் கீழ்வருமாறு
* திருச்சி- எஸ் திருநாவுக்கரசு
* தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
* கரூர்- ஜோதிமணி
* திருவள்ளூர் - ஜெயக்குமார்
* கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார்
* கிருஷ்ணகிரி- செல்லகுமார்
* ஆரணி- விஷ்ணுபிரசாத்
* விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
* புதுவை - வைத்தியலிங்கம்
இன்னும் சிவகங்கை வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அந்த தகவலும் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.