Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

போதை பொருள் தடுப்பு துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும்- கனிமொழி!

போதை பொருள் தடுப்பு துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும்- கனிமொழி!

J.Durai

கோயம்புத்தூர் , சனி, 30 மார்ச் 2024 (12:18 IST)
மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது பேசிய அவர்,திமுக கூட்டனி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெரிகிறது எனவும்  இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது.
 
கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனியில் இருக்கும் இண்டி கூட்டனி ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும் பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
 
நிச்சயமாக இந்த கூட்டணி இங்கு மட்டுமின்றி தமிழகத்தில்  போட்டியிடும் 40 இடங்களிலும் தெள்ள தெளிவாக இருக்கிறது, ஆயுஷ்மான் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருப்பதை போல் எங்களுக்கு தெரியாது என்றும் மகளிர் உதவி தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.
 
இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது.
 
மேலும் தமிழகத்தில்  போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி,
 
போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்  அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
 
குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்  அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும்.
 
இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு
 
பதில் அளித்த அவர் 60 வாங்கலாம் 90% கூட வாங்கலாம் எனவும் கனவு காண்பது அவரது உரிமை ஆனால் வெற்றியை நிச்சயமாக எங்களதுவேண்டியனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
 
ஒரு பைசா கூட ஓட்டுக்கு  செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார் பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள்  வாங்கினார்கள் என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.
 
முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழி பாட்டு தலங்களில் ஒரு குறிப்பிட்ட வேட்ப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்-பொன். இராதாகிருஷ்ணன்!