மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்திற்கு கூடுதலாக மூன்று தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டனர். இதை அடுத்து மக்களவை தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு கூடுதலாக மூன்று தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக மூன்று தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் சூடு பிடித்துள்ளன.