Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல்..! பிரதமர் மோடி கடும் விமர்சனம்...!!

Modi

Senthil Velan

, புதன், 10 ஏப்ரல் 2024 (11:37 IST)
திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் என்றும் ஒட்டுமொத்த குடும்பத்தில் திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது என்று குற்றம் சாட்டினார். 
 
திமுக ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்படுகிறது என்றும்  தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக தடுக்கிறது என்றும் பிரதமர் விமர்சித்தார். மேலும் திமுகவின் குடும்ப அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் இளைஞர்களின் வளர்ச்சி தடை பட்டிருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை எதிர்ப்பது திமுகவின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜாதி, மதம், மொழி ரீதியில் தமிழ்நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த திமுக முயல்கிறது என்றும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாகாசாகிவிடும் என்பதால் பிரித்தாலும் அரசியலை செய்கிறது என்றும் திமுகவின் பிரித்தாலும் அரசியலை அம்பலப்படுத்தாமல் ஓய மாட்டேன் என்று பிரதமர் தெரிவித்தார்.
 
அரசுக்கு 4300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் கூட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். 
 
இந்து தர்மத்தில் போற்றப்படும் பெண்களை இந்தியா கூட்டணியினர் அவமதிப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி பாஜக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!