Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக பயணம்

4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில்  காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை  இலவசமாக பயணம்

J.Durai

, வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (09:23 IST)
மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் இன்று ஏப்-19ம் தேதி நடைபெற்று வருகிறது.
 
அதனையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தநிலையில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது.
 
தமிழ்நாட்டின் கோவை,மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து "VOTENOW" என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.
 
இதனைதொடர்ந்து  60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் கைவிரலை துண்டித்த பா.ஜ.க பிரமுகர்கள் பரபரப்பு