Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டை காக்கும் வேள்வியில் நானும் பங்கு பெறுவது எனக்கு பெருமை- கமல்ஹாசன்!

Advertiesment
Lok sabha election 2024

J.Durai

திருச்சி , புதன், 3 ஏப்ரல் 2024 (13:17 IST)
திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நிறுவனரும்  நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.
 
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே என் நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன்...
 
தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தியாவின் மிக பழமையான கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை நம் பாரத பிரதமர் யாரா இருந்தாலும் அங்கிருந்து பேசுவார்கள்.
 
அதற்கும் மூத்தது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இந்த இரண்டிற்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை அந்தக் கோட்டையின் உள்ள ஊர் இன்று திமுக  கோட்டையாக உள்ளது. அந்தக் கோட்டை கதவுகள் எனக்கு திறந்திருக்கிறது நான் இங்கு வந்திருக்கிறேன். நாட்டைக் காக்கும் இந்த வேள்வியில் நானும் பங்கு கொள்வது எனக்கு பெருமை.
 
திருச்சியில் நடந்த முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்த பிரச்சார பொதுக்கூட்டம் இந்தியாவிற்கே திருப்புமுனையாக இருக்கும் என முதலமைச்சர் பேசியது குறித்தான கேள்விக்கு....
 
அது மிகையான வார்த்தை அல்ல நேர்மையான நம்பிக்கை என பதில் அளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? நடிகர் விஜய்சேதுபதியின் வைரல் வீடியோ..!