Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ கூட்டணி நான்கு எழுத்து கூட்டணி - தேர்தல் முடிவு வருவதும் ஜீன் 4 எனவே இந்த ராசியான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வேண்டும் - பிரமலதா விஜயகாந்த்!

அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ கூட்டணி நான்கு எழுத்து  கூட்டணி - தேர்தல் முடிவு வருவதும் ஜீன் 4 எனவே இந்த ராசியான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வேண்டும் - பிரமலதா விஜயகாந்த்!

J.Durai

திருச்சி , செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:34 IST)
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சி மரக்கடை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
 
அதில் பேசிய அவர்:
 
கருப்பையா வெற்றி பெற்றால் திருச்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார், எம்பி நிதியை முழுமையாக பயன்படுத்துவார், முதியோர் பென்ஷன் உள்ளிட்டவற்றை பெற்றுத் தர முயற்சிப்பார்.
 
பால் பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்கப்படும், பெல் தொழிற்சாலை தனியார் மயக்கம் ஆக்கப்பட்டுவிட்டது அதனால் பலர் வேலை இழந்துள்ளனர் அந்த தொழிற்சாலை மீண்டும் அரசு எடுத்து நடத்துவதற்கு முயற்சி எடுப்பார், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கு வழிவகை செய்வார்.
 
19ஆம் தேதி காலையிலேயே சென்று வாக்களித்து விடுங்கள் இல்லை என்றால் ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள்.
 
அம்மாவும் கேப்டனும் அமைத்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்தது அதேபோல பழனிச்சாமியும் பிரேமாவும் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.
 
எங்கள் கூட்டணி நான்கு கட்சி கூட்டணி அதிமுக, தேமுதிக எஸ்டிபிஐ நான்கு எழுத்து கொண்டது.  ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு வருகிறது எனவே ராசியான இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
 
மத்திய மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கும் கூட்டணிகளாக தான் இருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.
 
மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது, தமிழக முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது அவர்களுக்கு மக்கள் தண்டனையை இந்த தேர்தலில் அளிக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு..! ஏப்.16 வரை நீட்டித்து உத்தரவு..!