Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டி அணைத்து வாழ்த்திய பெண்.! கலங்கி நின்ற சண்முக பாண்டியன்.! விருதுநகரில் இறுதிக்கட்ட பிரச்சாரம்...

Senthil Velan
புதன், 17 ஏப்ரல் 2024 (14:53 IST)
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் விருதுநகர் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியில் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
18-வது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதன்படி விருதுநகர் தெப்பக்குளம், மேலரத வீதி, அசன் ஓட்டல்,ஏடிபி காம்புவுண்டு ஆகிய பகுதிகளில் விஜய பிரபாகரன் சகோதரர் சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரநாத்துடன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தன் தந்தையின் மறு உருவமாக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ள விஜய பிரபாகரனுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர் வெற்றி பெற்றால் மக்களாகிய உங்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவார் எனவும் தெரிவித்தார்.
 
மேலும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளே பேக்கரியில்  வியாபாரம் செய்தார். தேநீர் தயாரித்தார். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.  அப்போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ALSO READ: மக்களே உஷார்..! தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்.!

மேலும் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பெண் ஒருவர் அவரை  கன்னத்தை பிடித்து கொஞ்சியதோடு கட்டிப் அணைத்தார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments