கடலூரில் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி 300 திமுகவினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வரும்போது பெரிய அளவில் பணம் பட்டுவாடா மற்றும் பணப்புழக்கம் இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் எழுந்துள்ளது..
இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி 300 திமுகவினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. எடுத்து தேர்தல் பறக்கும் படையினர் உடனடியாக அங்கு சென்று பெட்ரோல் நிரப்ப வந்த 165 பேரின் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.