இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனை என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தது.ஆனால் இதற்கு எதிர்மாறாக டெல்லியில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்களை பாஜகவினர் வைத்தனர். மேலும் பாஜக வெளியிட்ட காவலாளி வீடியோவிலும் ராணுவம் இடம்பெற்றது. இதறாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபற்ற பிரசாரத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:
மசூத் அசாரை காங்கிரஸ் அழைத்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது ராணுவத்தை அவகதிக்கும் செயல் என்று தெரிவித்தனர்.
தற்போது இந்திய ராணுவம் மோடியின் ராணுவம் என கூறினார். இது பாதுகாப்பு படைகளை அவமதிக்கும் செயல் ஆகும். இந்திய பாதுகாப்பு படைகள் பிரசார பிரதமரின் படைகள் கிடையாது என்று யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.