தனிக்கட்சியாக அங்கீகாரம் அளிக்கப்படாது. ஆனால் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் குக்கர் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று டிடிவி தினகரனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது.
அமமுக கட்சியை வழிநடத்தும் தினகரனுக்கு அடிமேல் அடி விழுவதாக எதிர்தரப்பினர் மகிழ்ந்தனர்.இதனையடுத்து நேற்று தன் கட்சியினருக்கு ஒரு அறிக்கை அனுப்பி கட்சியினரை ஊக்கப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று காலையில் தினகரன் கட்சியான ,அமமுகவுக்கு ,பொதுச்சின்னமாக பரிசுப் பெட்டியைச் சின்னமாகக் கொடுத்தது தேர்தல் ஆணையம்.
கொடுத்ததுதான் தாமதாம் ஆனால் சின்னம் அறிவித்த நொடிலிருந்து வேகமாக செயல்பட்ட அமமுகவினர் குதூகளித்துக் கொண்டாடியதுடன், அதை ஜெட்வேகத்தில் விளம்பரம் செய்யத்துவங்கிவிட்டனர்.
தற்போது ##பரிசுப்பொட்டி #GiftBox ஆகிய 2 ஹேஷ்டேக்குகளும் சமூக வலைதளமான டிவிட்டர் தமிழக மற்றும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. அமமுகவின் தொழில்நுட்பப்பிரிவும் சமூக வலைதளங்களில் நெட்டிஷன்களிடம் கொண்டு செல்லும் பணிகளை தொடங்கிவிட்டனர்.
மேலும் தமிழகமெங்கிலும் தங்கள் சின்னத்தை விளம்பரம்செய்ய துள்ளிக்கொண்டு சுறுசுறுப்பாக வேலையை செய்யத்துவங்கிவிட்டனர் அமமுகவினர்.