Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (13:24 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளிய்யி வருகின்றன. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பாமக வும் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இது சட்ட மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரு தேர்தலுக்கும் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில் உள்ள முக்கிய அம்சங்களாவது:
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ, ஆகிய திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்.
 
ஸ்டெர்லைட் ஆலை, விவசாய ஆலை நிலத்தில் மின்கோபுரம் அனுமதிக்க மாட்டோம்
 
ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து
 
பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்
 
ஜிஎஸ்டி கவுன்ஸில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
 
மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி
 
தனியார் நிறுவன் ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ2 லட்சம் அளிக்கப்படும்.
 
காவிடி படுகை, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை.
 
விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்
 
தமிழகத்திற்கு என தனி செயற்கைக்கோள் ஏவப்படும்
 
கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட அனைத்து சிறு  வணிகக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்
 
ஏழுபேர் விடுதலை இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆகியவை இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்