நடந்து முடிந்த 17 வது பாராளுமன்ற தேர்தலில் கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணியும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணும் பணியும் தொடங்கியது.
கரூர் அடுத்த தளவாப்பாளையம் பகுதியில் உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தபால் வாக்குகள் மக்களவை தொகுதியில் 5698 வாக்குகளும், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 167 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இ.வி.எம் இயந்திரங்கள் மூலம் நடைபெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணியும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியும், முன்னிலையில் உள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியும் உள்ளதால், தேர்தல் ஆணையத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.