சலித் தொல்லையை போக்கும் நண்டு சூப் செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
தேவையான பொருட்கள்:
நண்டு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு - சிறிதளவு
தக்காளி - 2
கான்ஃபிளார் மாசு - 1 ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டை நன்கு சுத்தம் செய்து அதன் மேல் மஞ்சள்தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும்.
நன்கு வதங்கிய பின் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வைக்கவேண்டும்.
வெந்ததும் நண்டைத் தனியே எடுத்துவிட்டு கான்ஃபிளார் மாவை நீரில் கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.
கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறினால் சுவையான நண்டு சூப் தயார்.