இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதை அடுத்து பங்குச்சந்தை உயர்ந்தது என்பதும் ஆனால் பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதானி நிறுவனங்களின் பங்குகள் உயரவில்லை என்பது அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்தை சேர்ந்த ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் இன்று கடும் வீழ்ச்சி அடைந்ததால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் புதன் வெள்ளி மற்றும் இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய நான்கு நாட்களும் தொடர் சரிவில் அதானி நிறுவனங்கள் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முழுவதுமே அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.