கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை, இன்றும் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ரூ.74,000-க்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவு, தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து உள்ளது. இந்த திடீர் விலை சரிவு, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,275
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,235
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,880
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,118
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,074
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,944
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,592
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.126.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.126,000.00