சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, மீண்டும் ரூ.95,000 என்ற மைல்கல்லை கடந்தது.
நேற்று ஒரு பவுன் ரூ.94,720-க்கு விற்பனையான நிலையில், இன்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 உயர்ந்து ரூ.11,980-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் தங்கம் விலை தற்போது ரூ.95,840-க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.192-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ விலை ரூ.9,000 உயர்ந்து ரூ.1.92 லட்சம்-க்கு விற்பனையாகிறது.
சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மிக தீவிரமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.